Thursday, February 13, 2014

செல்போன் பயன்படுத்துவதால் 'கேன்சர்' வராதாம்





செல்போன் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்பது உண்மை இல்லை என புதிய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. 


செல்போன் பயன்படுத்துவதால், செல்போன் டவர்களால் மூளையில் கட்டி ஏற்படும், தலைவலி மற்றும் புற்றுநோய் ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால் மக்கள் இனி செல்போன்கள் பற்றி அச்சப்பட வேண்டியது இல்லை.

செல்போனை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுமா என்பது குறித்து இங்கிலாந்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவு மக்களுக்கு நிம்மதி அளிப்பதாக உள்ளது.

செல்போன் பயன்பாட்டால் மூளையில் கட்டி ஏற்படவோ, புற்றுநோய் ஏற்படவோ செய்யாது என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த முடிவை இங்கிலாந்தின் செல்போன் தொலைத்தொடர்பு மற்றும் சுகாதார ஆராய்ச்சி திட்டம் ஆதரித்துள்ளது.

கர்ப்பிணிகள் செல்போன் டவர் அருகே வசிப்பதால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. இது குறித்து செல்போன் தொலைத்தொடர்பு மற்றும் சுகாதார ஆராய்ச்சி திட்டம் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளது.

கர்ப்பிணிகள் செல்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு ரத்த புற்றுநோய் ஏற்படும் என்று கூறப்படுவதற்கும் எந்தவித ஆதாரமும் இல்லை.

செல்போன் மற்றும் வைஃபை தகவல்களை தாங்கிச் செல்லும் ரேடியோ சிக்னல்களால் மனிதர்களின் உடல்நலம் பாதிக்கப்படாது என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Saturday, February 8, 2014

உற்சாக பானம் குடிப்பவர்கள் எளிதில் போதைக்கு அடிமையாவார்கள்!: எச்சரிக்கை ரிப்போர்ட்





வாஷிங்டன்: ஆற்றலை அதிகரிப்பதற்காக இன்றைக்கு ஏராளமான பானங்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றை வாங்கி குடிக்கும் பானங்கள் இளைஞர்களை எளிதில் போதை பொருட்களுக்கு அடிமையாகும் ஆபத்து அதிகம் உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 


அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலை கழகத்தின் சமூக ஆராய்ச்சி அமைப்பு ஆராய்ச்சியாளர் ஒய்வான் எம். டெர்ரி மெக்எல்ராத் தலைமையிலான ஆய்வாளர்கள் இது தொடர்பான ஆய்வு ஒன்று மேற்கொண்டனர். அதில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் தெரியவந்தன.


இளைய தலைமுறையினர், ஆற்றலை அதிகரிக்க குடித்துவிட்டு கடைசியில் ஆல்கஹாலுக்கு அடிமையாகி விடும் ஆபத்து அதிகம் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.


இன்றைக்கு குட்டிப்பாப்பா முதல் இளைஞர்கள் வரை ஏதாவது ஒரு ஆற்றல் பானங்களை குடித்து வருகின்றனர். இந்த ஆற்றல் அளிக்கும் பானங்கள் பயன்பாடு அமெரிக்காவின் இளைஞர்களிடம் 3ல் ஒரு பங்கு உள்ளது.

இவற்றில் அதிகளவிலான கேபீன் என்ற பொருள் கலந்துள்ளது. இதனை அதிகம் பயன்படுத்தும் இளைஞர்களிடம், ஆல்கஹால், சிகரெட் அல்லது போதை பொருள் பயன்பாடும் அதிகம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் உயர்நிலை பள்ளி மாணவர்கள் 22 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் எடுத்து கொள்ளப்பட்டன. அவர்களில் 30 சதவீத இளைஞர்கள் கேபீன் கலந்த ஆற்றல் பானங்களை அருந்துவது தெரிய வந்துள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோரில் 40 சதவீதத்தினருக்கும் அதிகமானோர், ஒவ்வொரு நாளும் சாதாரண பானங்களை பயன்படுத்துவதும், 20 சதவீதத்தினர் சரிவிகித பானங்களை பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.

ஆற்றல் பானங்களை இளைய வயது கொண்ட பெண்களை காட்டிலும், ஆண்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். டீன் ஏஜ் எனப்படும் பருவ வயதினரின் வீட்டில் பெற்றோர் இருவரும் வீட்டில் இல்லாத நிலை அல்லது பெற்றோர் இருவரும் குறைந்த கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தால் அதிக அளவு ஆற்றல் பானங்கள் பயன்பாடு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இத்தகைய ஆற்றல் பானங்களில் சக்தியை அதிகரிப்பதற்கும், விழிப்புணர்வு அல்லது ஒருமுக நிலை ஏற்படுத்துதல் ஆகியவற்றிற்காக கேபீன் என்ற பொருள் அதிகமாக சேர்க்கப்படுகிறது. மேலும், இவற்றுடன் ஆல்கஹால் பயன்பாடும் சேர்ந்து கொள்கிறது. இதனால் ஆல்கஹாலின் நச்சு தன்மை வெளியே தெரிவதில்லை.

ஆற்றல் பானங்கள் பயன்பாடானது பிற்காலத்தில் போதை பொருள் பயன்பாட்டிற்கு கடுமையாக ஆளாகும் நிலைக்கு கொண்டு சென்று விடும் அபாயத்தை கொண்டுள்ளது.

சாதாரண பானங்கள் பயன்பாடு கூட இந்த அபாயத்தை தோற்றுவிக்கும் தன்மை கொண்டிருந்தாலும், ஆற்றல் பானங்களினால் ஏற்படும் அபாயம் அதிகம் என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதே கதைதான் நம் ஊரிலும் நடந்து கொண்டிருக்கிறது. உயரம் வளர ஒரு பானம், மூளை சுறுசுறுப்பாக இருக்க ஒரு பானம், நினைவாற்றலுக்கு ஒரு பானம், சக்தியை அதிகரிக்க ஒரு பானம் என ஆற்றல் பானங்களிலேயே இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. சிறுவயதிலேயே நஞ்சை ஊட்டி வளர்த்து விட்டு இளைஞர்கள் ஆனபின்னர் அவர்களாகவே போதையை தேடிப்போக வாய்ப்பாக அமைந்து விடுகின்றது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Tuesday, February 4, 2014

ரத்த அழுத்தம் என்றால் என்ன?







இந்தக் காலகட்டத்தில் இளம் வயதிலேயே, அதிலும் 20-25 வயதிலேயே நூற்றில் பத்து பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இளைஞர்களின் உழைப்பில்லா, பரபரப்பான வாழ்க்கை முறையில் இவையெல்லாம் இயல்பாகிப் பேனது. அதனால் ஏற்படும் விளைவுகளோ பயங்கரம்!


இரத்த அழுத்தம் என்றால் என்ன ? அதனால் ஏற்படும் விளைவுகளையும் அதை தடுக்கும் முறைகளையும் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தேவையை விட மிக உயர்ந்திருப்பதை 'ரத்த அழுத்த நோய்' அல்லது 'ரத்தக் கொதிப்பு' என்று கூறுகிறோம். இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால் இது ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக இந்நோய் வெளியே தெரியாது. சில வேளைகளில் மிகப் பெரிய பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய பின் கண்டுபிடிக்கப்படும். எனவே இதனை 'சைலன்ட கில்லர்' என்றும் கூறுவர்.

1732-ல் 'ஸ்டீபன் ஹேல்ஸ்' என்பவர் ஒரு குதிரையின் ரத்த அழுத்தத்தை சாதாரண 'மானோ மீட்டர்' என்ற கருவியை வைத்து அளந்தார். 1896-ல் 'சிவரோசி' என்பவர் நாம் இப்போது பயன்படுத்தும் 'ஸ்பிக்மோ மேனோ  மீட்டரை' கண்டு பிடித்தார். 1905-ல்தான் ரத்த அழுத்த நோயினுடைய முக்கியத்துவம் தெரிய வந்தது. உயர் ரத்த அழுத்தம் அதிக அளவு நோயை ஏற்படுத்துகிறது என்றும், பலர் இறந்து போகின்றனர் என்பதையும் ஒரு ஆயுள் காப்பீட்டுக் கழகம்தான் கண்டு பிடித்தது. அதன் பின் அனைவரது கவனமும் இதன் மீது திரும்பியது.

மருத்துவம் பயின்ற எவரும் ரத்த அழுத்தக் கருவியின் மூலம் ரத்த அழுத்தத்தைக் கண்டு பிடித்து விடலாம். மேல் அளவு 140-க்கு மேலேயோ அல்லது கீழ் அளவு 90-க்கு மேலேயோ இருந்தால் அந்த நோயாளியை மேற்கொண்டு பரிசோதிக்க வேண்டும். ஒரே ஒரு முறை மட்டும் அதிகமாயிருந்தால் ரத்த அழுத்த நோய் உள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. வேறு வேறு சமயங்களில் மூன்று முறை பரிசோதித்த பிறகு ரத்த அழுத்தம் இருந்தால் அவரை 'ரத்த அழுத்த நோயாளி' எனக் கூறலாம்.

ரத்த அழுத்த நோயை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:
1. கீழ் ரத்த அழுத்த அளவு 91 முதல் 105 வரை.
2. 106 முதல் 115 வரை.
3. 115-க்கு மேல் இருப்பது. இவர்களுக்கு கண்களின் விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

1. காரணம் ஏதுமின்றி வரும் ரத்த அழுத்தம் 90 சதம் பேரை பாதிக்கிறது. இதற்கான காரணம் துல்லியமாகக் கண்டு பிடிக்கப்படவில்லை.
2. மீதமுள்ள 10 சதவீதம் பேர் சிறுநீரகங்களில் பாதிப்பு, நாளமில்லாச் சுரப்பிகளினாலும் மற்ற காரணங்களினாலும் ரத்தக் கொதிப்பு நோய்க்கு ஆளாகிறார்கள்.
இரண்டாவது வகையைச் சார்ந்த 10 சதவீதம் பேரை முழுமையாகக் குணப்படுத்த வாய்ப்புள்ளது. அதன் காரணத்தை கண்டுபிடித்து அதை அகற்ற முடிந்தால் ரத்த அழுத்தம் சாதாரண நிலையை அடையும். முழுமையான உடற் பரிசோதனை மற்றும் ரத்த சோதனைகளை செய்வதம் மூலம் இந்நோய்க்கான காரணங்களை கண்டறியலாம். இதனால் இதய வீக்கம், இதய ரத்த ஓட்டம் குறைதல், மாரடைப்பு நோய், கை, கால் இயங்காமல் போவது சிறுநீரகங்கள் பழுதடைதல் போன்றவை ஏற்படும்.

ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படும்?
முதலில் சிறுநீர் பரிசோதனை செய்யப்படும். இதில் சிறுநீரகங்கள் பழுதடைந்துள்ளனவா என்பதை ஓரளவு அறியலாம். இரண்டாவதாக ரத்தத்தில் சர்க்கரை நோயும், ரத்த அழுத்தமும் சேர்ந்து இருந்தால் மாரடைப்பும், மேற்சொன்ன நோய்களும் வரும் வாய்ப்புகள் அதிகம். 'ஈ.சி.ஜி.' என்பது இதயம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய உதவும் பரிசோதனையாகும். இதயம் வீக்கமாகி உள்ளதா என அறிய 'எக்ஸ்ரே' பரிசோதனை உதவும். 'எக்கோ', 'ஆஞ்சியோகிராம்' போன்ற பரிசோதனைகளைக்கூட செய்து பார்க்கலாம்.

ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு அறிவுரை:

நீங்கள் ரத்த அழுத்த நோயாளி எனில், இந்நோய் பற்றி விரிவாக அறிந்து கொள்ளுங்கள். இந்நோயை கட்டுப்படுத்தாவிடில் இது மாரடைப்பு, மூளை பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும். மருத்துவரின் ஆலோசனைப்படி செயலாற்றுங்கள். உப்பு அதிகமுள்ள ஊறுகாய், கருவாடு, அப்பளம், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். உப்பு, உடலில் நீரை தங்கச் செய்து இதயத்தை பலமிழக்கச் செய்யும். கால், கைகள் வீங்க வைக்கும். ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். வெண்ணெய், நெய், எண்ணெய் போன்ற கொழுப்புச் சத்து மிகுந்த உணவுப் பொருட்களை சாப்பிடாதீர்கள். கொழுப்பு சத்து ரத்தக் குழாய்களை அடைத்துக் கொண்டு மேற்சொன்ன வியாதிகளை உண்டு பண்ணக் கூடும். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யுங்கள். ஒரு நாளைக்கு 1 மணி நேரமாவது வேகமாக நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது உடலில் கொழுப்புச் சத்து சேர்வதைத் தவிர்த்து விடுவதுடன் அழுத்தத்தையும் குறைக்கும். புகை பிடிப்பவராக இருந்தால் உடனேயே அதை நிறுத்துங்கள். புகை பிடிப்பவர்கள் ரத்த அழுத்த நோயினால் அவதிப்படுவதோடு அல்லாமல் மாரடைப்பு நோயினாலும் உயிரிழக்க நேரிடும்! மருத்துவரின் ஆலோசனையின்றி அவர் சிபாரிச் செய்யும் மருந்துகளின் அளவை நீங்களாகவே குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ கூடாது. உடல் எடையை குறையுங்கள். உங்களுடைய ரத்த அழுத்தத்தின் அளவை முறையாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக ஒரு முறை எழுதிக் கொடுத்த மருந்தை வாழ்நாள் முழுவதும் உபயோகிக்கக் கூடாது. அடிக்கடி மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று தேவைக்கு ஏற்ப மருந்துகளை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்ய வேண்டும்.

சர்க்கரை நோயை ச‌ரியாக க‌ண்ட‌றியு‌ம் வ‌ழிமுறைக‌ள்!








நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக கண்பார்வை இழப்பு ஏற்படலாம். சிறுநீரகத் தொழிற்பாடு குறையலாம். மாறாத புண்களும் அங்கங்களை சிகிச்சை மூலம் அகற்றலும் நேரிடலாம். மாரடைப்பு முதலான இருதயநோய்கள் ஏற்படலாம். பக்கவாதம் வரலாம் போன்ற பாதிப்புகள் எதிர்காலத்தில் ஏற்படலாம். 


இவை ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமாயின் உங்களது நீரிழிவை எப்பொழுதும் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். உங்கள் நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என நீங்கள் அறிய சில பரிசோதனைகள் உதவும். சிறுநீர் மற்றும் உங்கள் இரத்தத்தின் குளுக்கோ‌ஸ் குறிப்பிட்ட கால இடைவெளியில் அளவிட வேண்டியது அவசியம். இவற்றை அளவிடும் முறைகள்:


சிறுநீர் பரிசோதனை!

நீரிழிவை‌க் கண்டுப்பிடிக்கவும், கட்டுப்படுத்தவும் ஆண்டாண்டு காலமாகச் செய்யப்படுவதுதான் சிறுநீர்ப் பரிசோதனை. இது உங்கள் இரத்த குளுக்கோஸின் அளவை மறைமுகமாக அறிய ஓரளவு உதவும். ஆயினும் உங்கள் நீரிழிவு நோயின் நிலையைத் திட்டவட்டமாக அறிய இது உதவாது. இரத்தப் பரிசோதனை செய்ய வசதியற்ற இடங்களில் இதைச் செய்யலாம். இதை இரண்டு வழிகளில் செய்வர்.

1. பெனடிக் பரிசோதனை
2. டிப்ஸ்டிக் பரிசோதனை


இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மட்டம் 180க்கு மேற்சென்றால் மட்டுமே சிறுநீரில் சர்க்கரை இருப்பது தெரிய வரும் இன்னும் சிலரில் இரத்த குளுக்கோஸ் 180க்கு மேற்பட்டால் கூட சிறுநீரில் சர்க்கரை வெளிப்படாது. வேறு சிலருக்கு இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்தாலும் சிறுநீரில் வெளிப்படும். எனவே சிறுநீர்ப் பரிசோதனையை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறதா எனச் சொல்ல முடியாது. 

அதேபோல் சிறுநீர்ப் பரிசோதனையை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரது நீரிழிவுக்கான சிகிச்சையை நெறிப்படுத்த முடியாது. இரத்தப் பரிசோதனைகள் இரத்த குளுக்கோஸின் அளவை துல்லியமாகக் காட்டும். இதனை நீங்கள் இரண்டு வழிகளில் செய்யலாம். 

1. குளுக்கோமீட்டர் பரிசோதனை
2. ஆய்வுகூடங்களில் செய்யப்படும் நாளக்குருதி குளுக்கோஸ் அளவிடல் பரிசோதனை.


குளுக்கோமீட்டர் பரிசோதனை வீட்டிலும் செய்யக்கூடியது. இதனால் ஒவ்வொரு பரிசோதனைக்காகவும் நீங்கள் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியதில்லை. விரல் நுனியிலிருந்து ஒரு சொட்டு இரத்தம் வலியின்றி எடுக்கப்படுகிறது. உடனடியாகவே முடிவு கிடைக்கிறது. குளுக்கோமீட்டரில் எடுக்கப்படுவது மயிர்த் துளைக்குழாய் இரத்தம். இது நாடி இரத்தத்தை ஒத்தது. ஆய்வுக் கூடங்களில் பரிசோதனை செய்வார்கள். 





இதனால் குளுக்கோமீட்டரில் செய்யும்போதும் மருத்துவ ஆய்வுக்கூடத்தில் செய்யும் போதும் கிடைக்கும் இரத்த குளுக்கோஸ் அளவுகளில் சிறிய வேறுபாடுகள் உங்கள் சிகிச்சை முறைகளைப் பாதிக்காது. முதன்முறையாக ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறதா என நிர்ணயம் செய்வதற்கு ஆய்வுக்கூடங்களில் நாளத்திலிருந்து இரத்தம் எடுத்து பரிசோதனை செய்வார்கள். பின்பு நோயின் அவ்வப்போதைய நிலையை கண்டறிந்து நோயைக் கண்காணிக்க குளுக்கோமீட்டரில் எடுக்கப்படும் மயிர்த் துளைக்குழாய் இரத்தம் போதுமானது. 

ந‌ன்‌றி: பசுமை இ‌ந்‌தியா!



Monday, February 3, 2014

இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!







இன்றைய காலகட்டத்தில், பல காரணங்களால், இரத்த தானம் என்பது கட்டாயமாக செய்ய வேண்டிய ஒரு கடமையாக மாறி வருகிறது. இரத்த தானம் செய்வதால் ஒரு உயிரை காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கும் கூட அது பல உடல்நல பயன்களை அளிக்கிறது. 

பல விதமான நோய்கள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற பெரிதும் உதவுகிறது இரத்தம். பல பேருக்கு இரத்த தானம் செய்தவர்கள் கடவுளாக விளங்குகின்றனர். இரத்த தானம் செய்ததால், ஆபத்தான இருப்பவரின் வாழ்க்கையை சந்தோஷமாக மாற்றியதில் உங்கள் பங்கு இருப்பதை எண்ணி நீங்கள் பெருமை கொள்ளலாம். வார்த்தைகளால் விவரிக்க முடியாது அனுபவம் அது. அனுபவித்தால் மட்டுமே புரியும். 



18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள், நல்ல ஆரோக்கியத்துடனும் 50 கிலோவிற்கு மேல் இருந்தால், 450 மி.லி. இரத்தம் அவரை தானமாக கொடுக்கலாம். ஆண்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை இரத்தம் கொடுக்கலாம். பெண்கள் 4 மாதத்திற்கு ஒரு முறை இரத்தம் கொடுக்கலாம். இரத்த தானம் செய்வதால் ஏற்படும் உடல்நல பயன்களை பற்றி இப்போது பார்க்கலாமா... 


 சீரான இடைவேளையில் இரத்த தானம் செய்தால், உடலில் உள்ள இரும்புச்சத்தின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் ஹார்ட் அட்டாக் ஏற்படாமல் இருக்கும்.

இரத்த தானம் செய்வது உடலில் பல பாகங்களில் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.

கொலஸ்ட்ராலை குறைத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

கொழுப்புச்சத்து மற்றும் கலோரிகளை அதிகளவில் எரிக்க உதவும். மேலும் உடலின் ஒட்டுமொத்த கட்டமைப்பை மேம்படுத்த உதவும்.

இரத்த தானம் செய்வதால் ஒருவரின் உயிரை மட்டும் நீங்கள் காப்பாற்ற போவதில்லை. கூடுதலாக உங்கள் உடலில் புதிய இரத்த அணுக்கள் உருவாகவும் அது உதவும்.

இரத்த தானம் செய்வதால் உடலில் உள்ள இரும்பின் அளவு குறையும். அதனால் இரத்தம் அடர்த்தியாகி, ப்ரீ ராடிக்கல்களின் பாதிப்பு அதிகரிக்கும்.

இரத்த தானம் செய்வதால் உடல்நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, பல உயிர்களை காப்பாற்றலாம். மேலும் வாழ்வே கேள்வி குறியாக இருக்கும் பலருக்கும் அது புது வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கும்.

Sunday, February 2, 2014

COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?






நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம்.  

ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை.  


அவர்களுக்காக இதை எழுதுகிறேன். 


C  - Common  


O  -Oriented   

M  -Machine  

P  -Particularly   

U  -Used for   

T  -Trade   

E  -Education and  

R  -Research



COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research

உங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்லது கணினிகளுக்கு Wifi மூலமாக பகிர்வது எப்படி?


நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை  பயன்படுத்துவீர்கள் இதனை  எந்தவொரு Router-உம் இல்லாமல் 


உங்கள் கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய   Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் இணைப்பை  பகிர்வதற்கு Virtual Router எனும் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.

Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்கு உங்கள் கணினியின் Operating System Windows 7 ஆக இருக்கவேண்டும் மற்றும் உங்கள் கணினி Wireless பயன்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். Laptop கணினிகளில் Wireless சேவை இணைந்தேதான் வருகிறது Desktop கணினி என்றால் Wireless Device  தனியாக போட்டிருக்கவேண்டும்

சரி இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்

1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.

2.Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும்

அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும் 
Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும் 





3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இது பற்றி தெரியாத உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ளவும் 






உங்கள் வீட்டு ”பல்ப்” மூலமே இனி இன்டர்நெட்டை பயன்படுத்தலாம்

           







இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால் ‘லைபை’ வசதி கிடைத்து விடும். 
அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு விலை யில் அள்ளிக்குவிக்கும் சீனா தான் இப்போது இந்த ‘பல்ப்’ மூலம் இன்டர்நெட் வசதியையும் கண்டுபிடித்துள்ளது.
ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்டுக்கான ‘லைபை’ போய் விடும். ஒரு பல்பு எரியவிட்டால் நான்கு கம்ப்யூட்டர் வரைக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.
விநாடிக்கு 150 மெகாபைட் வேகம் கொண்டதான இந்த ”லைபை” குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. வர்த்தக ரீதியாக பயன்படுத்த முழு அளவில் தயாரிக்கப்படும் என்று இதை கண்டுபிடித்த ஷாங்காய் பல்கலைக்கழக பேராசிரியர் சிநான் கூறினார். லெட் வகை பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் அலைக்கற்றைகள் எழுப்பப்பட்டு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படுகிறது. சீனாவில் ஷாங்காயில் நவம்பர் 5 ம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச கண்காட்சியில் இந்த ‘லைபை’ அறிமுகம் செய்யப்படுகிறது.
வழக்கமான ‘வைபை’ வசதி, ரேடியோ அலைகளை கொண்டு ஏற்படுத்தப்படுகிறது. அதன் மூலம் இன்டர்நெட் உயிர்பெறுகிறது. ஆனால், இந்த ஒரு வாட் பல்பை வைத்து சீனா, இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளது. மலிவு விலை பொருட்களை கண்டுபிடி த்து உலக நாடுகளில் சந்தையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ள சீனா வின் ‘லைபை’ கண்டுபிடிப் பால் தொழில்நுட்ப புரட்சி ஏற்படும் என்று தெரிகிறது.
சீனாவில் மட்டும் 60 கோடி பேர் இன்டர்நெட் வசதி வைத்துள்ளனர். அவர்கள் எல்லாம் ‘வைபை’யில் இருந்து தங்கள் சொந்த நாட்டு கண்டுபிடிப்பான ‘லைபை’க்கு மாறி விடுவர். மேலும், உலக நாடுகளில் பலவும் இந்த வசதிக்கு மாறினால், ‘வைபை’க்கு டாட்டா காட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கணக்கு போடுகிறது சீனா. 

Saturday, February 1, 2014

இந்தியா முழுவதும் இன்டர்நெட் மூலம் இலவசமாக பேசலாம்.

இந்தியா முழுவதும் இன்டர்நெட் மூலம் இலவசமாக பேசலாம். 







  www.site2sms இனைய தளம்  இந்தியா முழுவதும் இலவசமாக பேச வாய்ப்பு வழங்குகிறது .

 இது முற்றிலும் இலவசம். 


 www.site2sms என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

இந்த தளத்தில் சென்று உங்கள் மொபைல் நம்பரையும் கடவுசொல்லையும் கொடுத்தால் போதும் 


இலவசமாக sms அனுப்பலாம், இந்தியா முழுவதும் அணைத்து மொபைல் நம்பருக்கும் இலவசமாக பேசலாம். 














காலையில் பசும்பால் குடிப்பதால் வரும் நன்மைகள்...!









காலையில் பசும்பால் குடிப்பதால் வரும் நன்மைகள்...!

தற்போது மேலை நாடுகளில் பசும்பாலை நெருப்பில் வைத்து காய்ச்சாமல் பச்சை பால் உண்ணும் முறை என்பது வேகமாக பரவி வருகின்றது.இதில் ஏராளமான நன்மைகள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

பொதுவாக இன்று நம்மிடையே பால் என்பது பாக்கெட்டுகளில் அடைக்கப் பட்டு இரசாயண முறையில் பதப்படுத்தப்பட்டு நமது தேவைக்கு விற்கப் படுகின்றது. இதில் சில தீமைகளும் சேர்ந்தே உள்ளது.அதாவது Pasteurization என்னும் சுத்தி கரிப்பு என்பது குறிப்பிட்ட அளவில் பாலை கொதிக்க வைத்து பாக்டீரியாவை அளிக்கும் முறையாகும்.இம் முறையால் பாலில் உள்ள Vitamin C - 20% சதவீதம், Vitamin B1 10% சதவீதம் அழிந்து விடுகின்றது. மேலும் பாலில் உடலுக்குத் தேவை யான நன்மை செய்யும் பாக்டீரியாவும் அழிந்து விடுகின்றது. இதனை உணர்ந்த மேலை நாட்டினர் Pasteurization முறையில் சுத்தி செய்யாத பாலை உண்ண விரும்புகின்றனர்.

ஆனால் இது சுகாதாரத்திற்குகேடு என அமெரிக்க உணவு மற்றும் நிர்வாகம் FDA -23 மாநிலங்களில் தடை விதித்துள்ளது. பச்சை பால் விரும்பிகள் சங்கம் இதனை எதிர்க்கின்றது.பச்சை பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் பற்றி சித்தர்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே கூறியுள்ளனர்.

அப்பான் முகூர்த்தத்து ளைங்கடிக்குள் ளுண்பது
மிப்பான மனுதர் விழிதாகு மூப்பாயி
கஞ்சத்தான் காண்டற் கரியனகிலமுன்
தஞ்சத்தானுண்ட விருந்தாம்.

பசும்பால் கறந்த ஐந்து நாழிகைக்குள் [2- மணி நேரம்] உண்பது நன்று. அவ்வாறு உண்டால் அப் பால் தேவாமிர்தத்துக்கு ஒப்பாகும். ஐந்து நாழிகைக்கு மேல் உண்டால் கைலாசபதி உண்ட ஆலகால விஷத்திற்கு ஒப்பாகும்.

காலையில் காய்ச்சாத பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள்
சூரிய உதய காலத்தில் பச்சை புல் மேய்ந்த ஆரோக்யமான பசுவின் பசும்பால் உண்பதால் கை கால் எரிச்சல், திரேக எரிச்சல், மஞ்சள் காமாலை,பாண்டு,இரத்த பித்தம், மார்பு சளி, போன்ற நோய்கள் தீரும்.தேகம் ஒளிவிடும், தாது புஷ்டி உண்டாகும்,மேலும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மிஞ்சிய வலிமை தரும். பாலை கரந்து சுத்தமான துணியில் 3 முறை வடிகட்டி சூடு ஆறுவதற்கு முன்பு உண்பது மிகவும் உத்தமம்.

சித்த மருத்துவ முறையில் மூலநோய், இரத்த மூலம், மஞ்சள் காமாலை, குடற்புண், தோல் நோய்கள், போன்ற நோய்களை குணப்படுத்த பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மூலிகைகளை அரைத்து காய்ச்சாத பசும்பாலில் கலந்து கொடுத்து இன்றும் குணப்படுத்தி வருகின்றனர்.

நன்றி :- ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

நாளுக்கு ஒரு முட்டை












நாளுக்கு ஒரு முட்டை :

கேரட்டை அப்படியே கடித்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை நன்றாக தெரியும் என்பது உங்களுக்கு தெரிந்தது தானே. ஆனால், முட்டையில் தான் கேரட்டை விட, அதிக பலன் உள்ளது என்று சர்வதேச அளவில் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கண் பார்வை பாதிக்காமல் இருக்க முக்கியமானது கரோடினாய்ட்ஸ். கேரட், பச்சைக் காய்கறிகளுக்கு சமமாக முட்டையிலும் இந்த சத்து உள்ளது. ஒரு வேறுபாடு, காய்கறி உணவை விட, முட்டையில் இருந்து கிடைக்கும் இந்த சத்து, உடனே உடலில் ஏற்றுக்கொண்டு விடுகிறது. இதனால் பலன் கைமேல்.

ஒரு நாளுக்கு ஒரு முட்டை போதும். கொலஸ்ட்ரால் அளவு கூடி விடுமே என்று பயப்பட வேண்டாம். கொலஸ்ட்ரால், ட்ரைகிளசரைடு அளவை கூட்டாமல் தான் முட்டை, இந்த சத்தை தருகிறது. கேரட்டோட, காய்கறியோட, முட்டையையும் தான் சாப்பிடுங்களேன்!

இளவயது மரணத்திற்கு காரணமாகும் மாட்டிறைச்சி.






இளவயது மரணத்திற்கு காரணமாகும் மாட்டிறைச்சி.

ரெட்மீட் எனப்படும் மாட்டிறைச்சியை சாப்பிட்டால் இளவயதில் மரணத்தை தழுவ நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலை நாடுகளில் பன்றியின் இறைச்சி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது. மாறாக மாட்டிறைச்சி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிறது. மையோக்ளோபின் என்ற இந்த புரோட்டீனே இதற்கு சிவப்பு வண்ணத்தை அளிக்கிறது.

பன்றியில் கோழியின் இறைச்சியை விட மையோக்ளோபின்(Myoglobin) அதிகமாக இருந்தாலும் மாட்டிறைச்சியைவிட மிகவும் குறைவு. இறைச்சி நன்றாக சமைக்கப்படும்போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.

மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மாட்டிறைச்சி அதில் சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவந்துள்ளது.

மாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினசரி மாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.

நான்கு ஆண்டுகளாக அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது. இதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் போன்றவை ஆகும். இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதேபோல ஹாட் டாக் எனப்படும் துரித உணவுகளை சாப்பிடும் 20 சதவிதம் பேர் இளம் வயதில் மரணமடைவடைதும் கண்டறியப்பட்டது. அதேசமயம் மாட்டிறைச்சிக்கு பதிலாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்யத்துடன் இருந்தது தெரியவந்தது. எனவே மாட்டிறைச்சியை குறைவாக சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.