இன்றைய காலகட்டத்தில், பல காரணங்களால், இரத்த தானம் என்பது கட்டாயமாக செய்ய வேண்டிய ஒரு கடமையாக மாறி வருகிறது. இரத்த தானம் செய்வதால் ஒரு உயிரை காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கும் கூட அது பல உடல்நல பயன்களை அளிக்கிறது.
பல விதமான நோய்கள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற பெரிதும் உதவுகிறது இரத்தம். பல பேருக்கு இரத்த தானம் செய்தவர்கள் கடவுளாக விளங்குகின்றனர். இரத்த தானம் செய்ததால், ஆபத்தான இருப்பவரின் வாழ்க்கையை சந்தோஷமாக மாற்றியதில் உங்கள் பங்கு இருப்பதை எண்ணி நீங்கள் பெருமை கொள்ளலாம். வார்த்தைகளால் விவரிக்க முடியாது அனுபவம் அது. அனுபவித்தால் மட்டுமே புரியும்.
18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள், நல்ல ஆரோக்கியத்துடனும் 50 கிலோவிற்கு மேல் இருந்தால், 450 மி.லி. இரத்தம் அவரை தானமாக கொடுக்கலாம். ஆண்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை இரத்தம் கொடுக்கலாம். பெண்கள் 4 மாதத்திற்கு ஒரு முறை இரத்தம் கொடுக்கலாம். இரத்த தானம் செய்வதால் ஏற்படும் உடல்நல பயன்களை பற்றி இப்போது பார்க்கலாமா...
இரத்த தானம் செய்வது உடலில் பல பாகங்களில் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.
கொலஸ்ட்ராலை குறைத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
கொழுப்புச்சத்து மற்றும் கலோரிகளை அதிகளவில் எரிக்க உதவும். மேலும் உடலின் ஒட்டுமொத்த கட்டமைப்பை மேம்படுத்த உதவும்.
இரத்த தானம் செய்வதால் ஒருவரின் உயிரை மட்டும் நீங்கள் காப்பாற்ற போவதில்லை. கூடுதலாக உங்கள் உடலில் புதிய இரத்த அணுக்கள் உருவாகவும் அது உதவும்.
இரத்த தானம் செய்வதால் உடலில் உள்ள இரும்பின் அளவு குறையும். அதனால் இரத்தம் அடர்த்தியாகி, ப்ரீ ராடிக்கல்களின் பாதிப்பு அதிகரிக்கும்.
இரத்த தானம் செய்வதால் உடல்நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, பல உயிர்களை காப்பாற்றலாம். மேலும் வாழ்வே கேள்வி குறியாக இருக்கும் பலருக்கும் அது புது வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கும்.

satya, you are great.
ReplyDelete